Wednesday, June 3, 2009

புலிகளுடன் நடத்திய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல-ஜனாதிபதி


பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக தோற்கடித்த படைவீரர்களின் வெற்றியை கொண்டாடும் தேசிய விழா இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றது. அவர் அங்கு உரையாற்றும் போது,

இனிய மக்களே, இது நம் எல்லோருடைய தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளாய் வாழவேண்டும். இங்கு எந்தவித பேதமும் இருக்கமுடியாது. எமது படைவீரர்கள் புலிகளுடன் நடத்திய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல புலிகளின் பிடியில் இருந்து அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக நடாத்தப்பட்ட யுத்தம். இதன் போது எமது படைவீரர்கள் உயிர்நீர்த்தார்கள் அவர்களுடைய சேவையை மறக்கமுடியாது. விடுதலைப் புலிகளை தோல்வி பெறச்செய்து நாம் பெற்ற வெற்றி இந்த தேசத்தின் வெற்றி. நீங்கள் பெற்றுதந்த பெரு வெற்றி.

அன்பார்ந்த படைவீரர்களே பயங்கiவாதிகளுடனான யுத்தம் முடிந்துவிட்டது. இனி நாம் தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றிகொள்ள வேண்டும். அவர்களை பாதுகாக்கவேண்டும். அவர்கள் பயம், சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும். அது தான் நம் எல்லோருடைய கடமை என தெரிவித்தார்.

No comments:

Post a Comment