Thursday, June 11, 2009

அவுஸ்திரேலியாவில் புலிகளைத் தடைசெய்யும் தீர்மானத்தை அவ்வரசு கைவிடுகின்றதாம்.

புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கம் என தடைசெய்வது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினர் உட்ப்பட்ட அரச அதிகாரிகளால் ஆராயப்பட்டது. தற்போது புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளமையை கருத்திற்கொண்டு, அவ்வியக்கத்தை தடை செய்வது தொடர்பான பரிசீலினை கைவிடப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் இம் முடிவு தொடர்பாக இலங்கை அரசு அதிருப்தி அடைந்துள்ளது. புலிகள் இயக்கம் வெளிநாடுகளில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்படும் போது அவர்கள் மீள உயிர் பெறலாம் என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment