கொழும்பில் கொள்ளைக்கும்பல்-பொலிஸார் துப்பாக்கிச்சமர்.
இன்று காலை கொழும்பு கோட்டே பிரதேசத்தில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றில் வாகனம் ஒன்றை இடைமறித்த பொலிஸாருக்கும் அதில் பயணம்செய்த துப்பாக்கிதாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் துப்பாக்கிதாரி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் அதில் பயணம் செய்த மூவர் தப்பி ஓடியுள்ளனர். இவ்வாகனத்தில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவ்வாகனம் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment