ஈபிடிபி வெற்றிலையில் போட்டியிடும்.
இடம்பெற இருக்கின்ற வவுனியா உள்ளூராட்சி மற்றும் யாழ் நகரசபைத் தேர்தல்களில் ஈபிடிபி யினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ரெலோவில் இருந்து பிரிந்து சென்றுள்ள சிறிரெலோ எனப்படும் சிறி-தமிழீழ விடுதலை இயக்கத்தினர் மற்றும் ஈரோஸ் அமைப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கான வேட்பாளர் தெரிவின்போது ஈபிடிபியினருக்கு 4 ஆசனங்களும் சிறி-ரெலோ , ஈரோஸ் னருக்கு தலா 3 ஆசனங்களும் வழங்கப்படவுள்ளதுடன் எஞ்சிய 5 ஆசனங்களும் ஐ.ம.சு.முன்னணியின் ஏனைய கட்சிகளிடையே பங்கிடப்படும் என கூட்டு முன்னணி வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. அதே நேரம் வேட்பாளர்களுக்கான பங்கீட்டு விடயத்தில் தமிழ் கட்சிகளுடையே இழுபறி காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment