பயங்கரவாதத்தை முறியடிக்க, உலக நாடுகளுக்கு இடையே உண்மையான ஒத்துழைப்பு தேவை: மன்மோகன்சிங் வற்புறுத்தல்
ரஷியாவின் யெகடரின்பர்க் நகரில், `ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு' சார்பில் உச்சி மாநாடு நடைபெற்றது. ரஷியா, சீனா உள்ளிட்ட 6 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில்,
"ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் அமைதியும், வளமும் ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்று விரும்புகிறோம். நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என்ற அடிப்படையில் இதுபோன்ற மாநாடுகளில் பங்கேற்று வருகிறோம். நமது மக்களின் விருப்பங்களை நிறைவு செய்வதற்கு சுமூகமான சூழ்நிலை அவசியம். பயங்கரவாதம், தீவிரவாத கொள்கைகள் மற்றும் சட்டவிரோத போதை பொருள் கடத்தல் போன்ற முக்கிய சவால்களை நமது பிராந்தியம் எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. எந்த ஒரு நாட்டுக்கும் விதிவிலக்கு இன்றி, சர்வதேச அளவில் பயங்கரவாத குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே உலகை அச்சுறுத்தும் இந்த பயங்கரவாத குற்றங்களை முறியடிக்க அனைத்து நாடுகளுக்கு இடையே உண்மையான ஒத்துழைப்பு அவசியமாகும் என்று கூறினார்.
0 comments :
Post a Comment