இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு இலங்கைச் சட்டங்களின் கீழ் நீதி கிடைக்காது: சரத்.என்.சில்வா
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு இலங்கைச் சட்டங்களின் கீழ் நீதி கிடைக்காதென பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த மக்கள் இலங்கைச் சட்டங்களிடமிருந்து நீதியை எதிர்பார்ப்பதில் எந்தவித அர்த்தம் இல்லையென்பதுடன், இந்த மக்கள் குறித்து இந்த நாட்டுச் சட்டங்கள் எந்த சிரத்தையும் காட்டவில்லையெனவும் நீர்கொழும்பு மாரவிலவில் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றக் கட்டடமொன்றை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு தான் நேரில் சென்று பார்வையிட்டதாகக் கூறிய சரத்.என்.சில்;;;வா, அந்த மக்கள் படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் தன்னால் கூறமுடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டின் பிரதம நீதியரசர் வந்திருக்காரென அறிந்த இந்த மக்கள் தன்னைப் பார்த்து புன்னகைக்க முற்பட்டதாகக் கூறிய அவர், பதிலுக்கு தானும் அவர்களைப் பார்த்து புன்னகைக்க முயன்றதாகவும், எனினும், தன்னால் புன்னகைக்க இயலவில்லையெனவும் தெரிவித்துள்ளார். எனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தான் தோற்றுப்போயுள்ளேன் எனவும் பிரதம நீதியரசர் கூறினார்.
Thanks INL
0 comments :
Post a Comment