இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பளிக்க கொழும்பு தொழற்சாலைகள் முன்வருகின்றன.
இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழல்வாய்பு மற்றும் தொழில் பயிற்சி வழங்க தென்னிலங்கை தொழிற்சாலைகள் முன்வந்துள்ளன. றை ஸ்ரார் அப்பறல் நிறுவனத்தின் தலைவர் குமார் தேவபுர தனது தொழற்சாலைகளில் 500 வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான வேண்டுதலை தான் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இவ் வேலைவாய்புக்களின் நிமிர்த்தம் அவர்களை கொழும்பு கொண்டு வந்து 6 மாத காலத்திற்கு தொழில்பயிற்சி வழங்குவதற்கும், பயிற்சி காலத்தில் அவர்களுக்கான தங்குமிட மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் பயிற்சி காலத்தின் போது ஊக்குவிப்பு கொடுப்பனவாக மாதமொன்றிற்கு 10000 ரூபா வழங்கப்படும் எனவும் இப்பயிற்சிக்கு இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இளைஞர் யுவதிகளுடன் முன்னாள் புலி உறுப்பினர்களையும் வரவேற்பதாகவும் தான் அவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயிற்சி முடிவில் சான்றில் வழங்கப்படும் எனவும் தனது தொழற்சாலையில் அவர்களுக்கான தொழிலுக்கு உத்தரவாதம் உண்டு எனவும் தெரிவித்த அவர் விரும்புவோர் சுயமாக வேறு தொழிற்சாலைளிலும் தொழிலைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment