கச்சத்தீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவில்லை: இலங்கை அரசு மறுப்பு
கச்சத்தீவில் இலங்கை அரசு கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளதாகவும், அங்கு ராணுவ நடமாட்டம் இருப்பதாகவும் இந்திய மீனவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் பரவியதையடுத்து இலங்கை அரசு அச்செய்திகளை மறுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிடப்பட்டுள்ள மறுப்புச் செய்தியில், கச்சத்தீவில் இலங்கை அரசு கண்காணிப்பு கோபுரம் கட்டியிருப்பதாகவும், ராணுவ தளம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எவ்வித உண்iயும் இல்லை. அங்கு கண்காணிப்பு கோபுரமோ, ராணுவ தளமோ அமைக்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை. அத்துடன் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்று சித்ரவதை செய்வதாக கூறப்படுகின்றது. இக் குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சிலர் இது போன்ற தகவல்களை பரப்பி விடுகிறார்கள் என இலங்கை அரசு விடுத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment