Monday, June 15, 2009

இராணுவ லெப்டினட் உட்பட மூவர் கைது.

சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் இரிஓய பொலிஸ் சோதனைச் சாவடியை கடக்க முயன்ற இராணுவ லெப்டினன்ட, பொலிஸ் கொஸ்தாபல் உட்பட மூவர் ஹபரண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி அதற்கான ரவைகள் 30, இலக்கத்தகடு இல்லாத மோட்டார் பைசிக்கிள் ஒன்று ஜிபிஎஸ் கருவி ஒன்று லப்டொப் கணனி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்பொருட்கள் கெப்பட்டிகொல்லாவ பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டு கசலக்க பிரதேசத்திற்கு என்.சீ 9559 என்ற தற்காலிக இலக்கத் தகடுபொருத்தப்பட்ட வான் ஒன்றில் எடுத்துச் செல்லப்படுகையில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவ்வாகனத்தில் ரி 56 துப்பாக்கி ரவைகள் பல பாய்ந்துள்ளதற்கான அடையாளங்கள் பல காணப்படுவதாகவும் இவை புலிகளால் பாவிக்கப்பட்ட வாகனங்கள், பொருட்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com