Saturday, June 13, 2009

இலங்கையின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும்.

புதிதாக பிரதம நீதியரசராக பதவியேற்ற திரு. ஆசோக டீ சில்வா அவர்ளை வரவேற்கும் சம்பவம் ஒன்றில் பேசிய அவர், இலங்கை ஏனைய தேசங்களோடு சேர்ந்தும் இசைந்தும் சகிப்புத்தன்மையோடும் வாழும் அதே நேரத்தில், தனது இறைமையையும் தனித்துவத்தையும் இறுக்கமாகப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், எமது தேசப் பரப்பையும் மக்கள் தொகையையும் நோக்குமிடத்து சிறியதாக இருந்தபோதும், இறைமையைப் பாதுகாக்கும் விடயங்களில் தேசத்தின் பருமன் அல்ல நியாத்தின் பருமனே கருத்தில் கொள்ளப்படும். ஒரு தொகை தேசங்களுள் ஒன்றாகக் கலந்திருக்கும் ஒரு தேசம் தன்னை அவைகளிடமிருந்து தனிமைப் படுத்தி வைக்காமல் அந்தத் தேசங்களோடு சேர்ந்து இசைந்து இயங்கி மற்றய தேசங்களின் ஆதரவையும் அரவணைப்பையும் பெற்று அவைகளோடு கலக்கும் காலங்களில் அதன் தேசிய எல்லைகளைக் கெட்டியாக வைத்திருத்தல் வேண்டும். எமது தேசம் புதிய நம்பிக்கை தரும் புதியசகாப்தத்துள் புகும் சமாதானச்; சூழலில் மக்களுக்குள் புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் திருப்தியும் பெற்று இயல்பு வாழ்கை நீடிக்கும் திசையைநோக்கி நாடு முன்னேறும் சமயத்தில் தான் உயர்நீதித்துறையில் புகுந்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment