போரின் நாயகர்கள் பிரிவினைவாதத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக உயிர்த்தியாகம் செய்யவில்லையாம்.
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக தமது உயிரை தியாகம் செய்த படைவீரர்கள் நாடு பிரிந்துபோவதற்கு வலுச்சேர்பதற்காக தமது உயிரை தியாம் செய்யவில்லை என நாட்டுப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பர அமில தேரர் அவ்வியக்கத்தின் தலமைக்காரியாலயத்தை நேற்று 21ம் திகதி கொழும்பில் திறந்து வைத்து பேசியபோது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், இந்த நாட்டில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்காக மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை. நாட்டை பலவினப்படுத்தி, கூறுபோட உலகம் முனைந்து கொண்டிருக்கின்ற தருணத்தில் நாம் சற்றும் ஓய்வெடுக்க முடியாது. எவ்வாறாயினும் உலக நாடுகளின் எம்நாட்டை பிரிக்கும் நோக்கத்தை எம்படையினர் பயங்கரவாதத்தை அழித்ததன் மூலம் தோற்றடித்துள்ளனர் எனவே எதிர்காலத்தில் 13ம் திருத்தச்சட்டம் தொடர்பாக அரசு கொண்டுள்ள நோக்கத்தையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment