வவுனியாவில் தற்கொலை அங்கி மீட்பு : புலி உறுப்பினர் சுட்டுக்கொலை.
படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா வாரிக்கட்டுப் பிரதேத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.5 கிலோ கிராம் எடைகொண்ட தற்கொலை அங்கி ஒன்றும் 8 கிரனேட்டுக்களும் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வவுனியா பொம்பமடுப் பிரதேசத்தில் 61ம் படையணியினர் நேற்று நண்பகல் தேடுதல் மேற்கொண்டபோது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 3 ரி 56 துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment