வவுனியா முகாம் மக்களுக்கு அம்மை நோய்
வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் மக்களில் 12ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அம்மை நோய் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 12ஆம் திகதி வரையில் 12ஆயிரத்து 195 பேர் சின்னமுத்து நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், எனினும், தற்போது அம்மை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டது. தற்போது 40 முதல் 50 பேரே இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் கூறியுள்ளது.
இதேவேளை, இரண்டாயிரத்து 139 பேர் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்தது.
0 comments :
Post a Comment