இணையத்தளங்களை பாவிப்பது அடிப்படை மனித உரிமையாகும்.
இன்றய மனிதவாழ்வில் இணையத்தளங்களைப் பார்ப்பது வாழ்வின் அத்தியாவசியமேயொழிய உல்லாசத்திற்கான பயன்பாடல்ல என்று பிரெஞ்சுக் கோட்டு தீர்ப்பளித்துள்ளது. 1789 இன் பிரேஞ்சுப் புரட்சி தந்த அரசியற் சாசனத்தின்படி எந்த மனிதனும் சந்தேகத்திற்கு அப்பால் குற்றவாளியென்று நிறுவப்படும் வரைக்கும் அவர் நிரபராதியாகும்.
பதிப்புரிமையுள்ள இசை, வீடியோ சினிமாக்களைக் காணாமல் பதிவு செய்ததற்கெதிரான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நாடாத்திய பிரஞ்சு நீதிமன்றம் சர்வதேச வலைத்தளத்தைப் பார்ப்பது நவீன வாழ்வில் மனிதர்களின் அடிப்படை உரிமையாகும் என தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோதமாக நகல் எடுக்கக் கூடாது என்று உலகிலுள்ள கடுமையான சட்டத்திற்கு எதிரானதே இந்தப் பிரான்சின் முடிவாகும். இவ்வாறு களவாகப் பதிபவர்களுக்கு எதிராக 3 முறை எழுத்துமூல எச்சரிக்கை செய்த பின்னரே வழக்குத்தொடர உரிமையுண்டு. பிரான்சிலே வலைத்தளங்களிலிருந்து காணமற் பதிவிறக்கம் செய்வது சம்பந்தமான வழக்கின் எண்ணிக்கையானது 180000 ஆகும். இவ்வளவு தொகை வழக்குகளை விசாரிப்பது பெருந்தொகைச் செலவாகும்.
0 comments :
Post a Comment