Monday, June 15, 2009

பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? இலங்கை அரசு மறுப்பு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன்பு உயிருடன் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை இலங்கை அரசும், ராணுவமும் மறுத்துள்ளன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு, பிரபாகரனும், அவரது 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனும் கொல்லப்படுவதற்கு முன்பு உயிருடன் பிடிக்கப்பட்டு உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக தனது அறிக்கையில் கூறியிருந்தது. எனினும் இதுபோன்ற கருத்துகள் வேடிக்கையானவை என இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதை இலங்கை அதிபர் ராஜபட்சவின் சகோதரரும், பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபய ராஜபட்சவும் மறுத்துள்ளார். நந்திக்கடல் பகுதியில் நடந்த கடும் சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றார் அவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com