துரோகி, இனவாதி, எட்டப்பன்! -கிழக்கான் ஆதம்-
‘எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்!.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான்!
இவன் - சோறு போடுறான்
அவன்- கூறு போடுறான்...!' (பட்டுக்கோட்டையார்)
புலி எனும் எலி கிலி பிடித்து வீழ்ந்தவுடன் விழி பிதுங்கிய புலம்பெயர் புலிக் கூட்டம் இன்று சனி பிடித்து கிறுக்குடன் அலைகிறது முன்னொரு காலத்தில் முருங்கமரக் காட்டுக்குள் வாழ்ந்து வந்த புலிகளுக்கு பல பிரச்சார ஊடகங்கள் இருந்தன இன்றும் அவை இருக்கின்றன. அவர்களுக்கு அந்தக் காலத்தில் செய்திகள் எழுதுவதற்கும், ஆராச்சிகள் செய்வதற்கும், ஆய்வுகள் நடாத்துவதற்கும், ஒரு விடயம் இருந்தது அதுதான் புலிகள். அதுகள் எலியாக மடிந்த பின்னர் தற்போது எழுதவோ அல்லது விவாதிக்கவோ வார்தையோ அல்லது வாதமோ இல்லாமல் போனதால் பட்டங்கள் வழங்குவதில் பல்கலைக்கழகங்களாக அவைகளும் அதன் விசுவாசிகளும் கிளம்பியுள்ளனர். அந்தப் பட்டங்கள் மூன்றுவகை ஒன்று “துரோகி” இரண்டாவது “இனவாதி” மூன்றாவது “எட்டப்பன்”.
முதலாவது- பழைய இயக்கங்கள் சார்ந்த நண்பர்களும் புலிகள் இயக்கத்திற்கும் அவர்களின் பாசிச வாதத்திற்கும் எதிராக குரல் கொடுப்பவர்களும் புலிகளின் பாசிச வாதத்தை அழிக்கத் துணை நின்றவர்களும் “துரோகி”
இரண்டாவது- இயக்கங்கள் சாராதவர்கள் புலிகளின் போக்கையும் தற்போதைய அவர்களின் பினாமிகள் நடாத்தும் பித்தலாட்டங்களையும் விமர்சித்து அவற்றை மக்களின் கண்முன் கொண்டு வருபவர்கள் சகோதர மொழியையோ அல்லது மற்றைய மதங்களையோ சார்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் “இனவாதி”
மூன்றாவது- தலைவரின்(பிரபாகரனின்) மறைவுக்குப் பின் தலைவர் மறைந்ததை அம்பலப் படுத்தி அவர்களின் கலக்சன் வாழ்வுக்கு ஆப்புவைத்தவர்களும், தலைவரின் ஆட்சிக் காலத்தில் தலைவருடனும் இயக்கத்துடன் நெருக்கமாக இருப்பதுபோல் இருந்து கொண்டு சர்வதேச உளவு அமைப்புக்களுக்கு தகவல் வழங்கியவர்களும். “எட்டப்பர்கள்”
இதில் “துரோகி” பட்டம் மிகவும் பழம்பெரும் பெருமைகளைக் கொண்டது அதுவே புலிகளின் பாசிசத்தின் அழிவுக்கு வழிகோளியது என்றாலும் அது உலகில் வாழும் பெரும்பாலான தமிழர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதால் அதனை பிரயோகிப்பது தங்களின் இருப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று விழித்துக் கொண்டுள்ள பாசிச பல்கலைக்கழகங்கள் தற்போது புதிய இரண்டு பட்டங்களை வழங்கிவருகின்றன. அதுதான் இனவாதி மற்றும் எட்டப்பன்.
ஏன் துரோகிப் பட்டம் தற்போது சோபிக்கவில்லை என்பதை நாம் நோக்குவோமாயின் பல “அரங்க(ம்)”ங்களில் “புதின(ம்)”ங்களை நாங்கள் காணலாம். பண்டைய எள்ளாளத் தலைவரின் ஆட்சிக் காலத்தில் துரோகிப் பட்டம் சென்றடையாத மூலைகளே இல்லை எனலாம் அரசியல்வாதிகள், படித்தவர்கள், மேதைகள், ஏனைய இயக்கப் போராளிகள், சாதாரண பொதுமக்கள், அண்டைய நாடான இந்தியாவின் பிரதமர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள், பள்ளியில் தொழுதுகொண்டிருந்தவர்கள், புலிகள் இயக்கத்துக்குள் இருந்த புத்திசாலிகள், விவசாயிகள், பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தவர்கள், அரச ஊழியர்கள், மத குருக்கள் என்பவர்களையும் தாண்டி இறுதி யுத்தத்தில் தலைவர் சரணடையும்வரை காத்திருந்து செத்துத்தொலையாமல் சிங்கள இராணுவத்தை நம்பி ஓடிவந்த மக்கள் வரை பரந்து விரிந்துள்ளது.
இதற்கு உதாரணமாக பல ஊடகங்களும் செய்தித்தாள்களும் இணையச் செய்தித்தளங்களும் இருக்கின்றன. அன்றைய காலகட்டத்தல் இந்தப் பட்டத்துடன் மண்டையில் போடப்பட்டதால் நின்றுபோன பத்திரிகைகள் தொடக்கம் அன்று முதல் இன்றுவரை இந்த பாசிச வாதிகளை தோலுரித்துவரும் தினமுரசு, தேனி வரை அனைத்தும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளன.
எனவே தற்போது துரோகி என்ற பட்டத்துடன் ஒருவர் இருப்பாராயின் அவர் பொதுமக்களாகிய எங்களுக்கு நல்லதைச் சொல்பவர், செய்பவர் என மக்கள் அவர் பின்னால் செல்லத் தொடங்கி விட்டனர். எனவே இந்தப்பட்டத்தினால் தாங்கள் இனிவரப்போகும் வாய்ப்புக்களையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தினால் புதிய இரண்டு பட்டங்களையும் பாசிச பல்கழைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
எனவே தற்போது இலங்கையில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்தப் பட்டம் வழங்கப்பட்டு பட்டதாரிகளாக உள்ளதால் தற்போது இந்தப் பட்டதாரிகள் அரசியலிலும் போராட்டத்திலும் சக பட்டதாரிகளின் பின்னால் அணிதிரளத் தொடங்கியுள்ளனர். எனவே உடனே அதை தடுத்த நிறுத்தத்தான் மேலதிகமாக வேறு இரண்டு பட்டங்களை வழங்குவதாக தேச எல்லைகள் அற்ற எ(பு)லிகள் அமைப்பு முடிவெடுத்தளாதாக தெரிகிறது.
ஆனால் உண்மையில் இந்தப் பட்டங்கள் அவர்களின் அமைப்புகளுக்குள் எழுந்துள்ள குத்துவெட்டுக்களால் தங்களுக்குள் தாங்கள் வழங்கிக் கொள்கின்ற பாரம்பரியம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்டது. மக்களின் மீட்ச்சிக்காகவென்று மூளைச் சலவை செய்யப்பட்டதால் இறந்தபோன போராளிகளுக்கும் இந்தப் பட்டங்கள் தற்போது வழங்கப் பட ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுதான் இதில் கொடுமை. அதன் முன்னோடியாக சில நாட்களுக்கு முன்னர் நாடாத்தப்பட்ட புதினத்தில் தமிழ் செல்வனின் வீரச் சாவுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் தமிழ்செல்வன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியல்ல அவரது விதவை மனைவிமேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியேயாகும்.
காரணம் அவர் அண்மையில் கருணாவைச் சந்தித்திருந்தார் பின்னர் வடக்கில் தேர்தலில் நிற்கப் போவதாக செய்தி வந்தது தற்போது அவர் இங்கிலாந்துக்குச் சென்று உறவினர்களுடன் வாழ விரும்புவதாக கூறியதாக செய்திகள் வருகின்றது. இந்தப் பின்னனியில்தான் புதினம் காட்டியிருந்தனர் புதினத்தார்கள்.
அடுத்து ஒரு நல்ல ஜோக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்! நேற்று பி.பி.சிக்குப் பேட்டியளித்த முன்னைநாள் புலிகளின் இந்நாள் சர்வதேசப் பேச்சாளர் கே.பி ஒரு ஜோக் விட்டார்! அது சர்வதேச தமிழீழம் அமைக்கப்போவதாக. இது ஒருவேளை நிலத் தொடர்புகளற்ற தமிழீழமாகக் கூட இருக்கலாம். இந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு வவுனியாப் பெண்மனி அவரது செய்தியைக் கேட்டதும்
“தூ... நாட்டில பலி கொடுத்தது காணாது என்று ஒன்டு ரெண்டு தப்பி வெளிநாட்டில கிடக்கிற பிள்ளகளையும் பலி கொடுக்கவாமோ! முதல்! நாட்டில பிரச்சினை என்டு வெளிநாட்டுக்கு பிள்ளைகளை அனுப்பின நாங்கள்! இப்ப வெளிநாட்டில இருக்கிற பிள்ளகல உடன நாட்டுக்கு எடுக்க வேனும்” என்றார்.
கே.பி இவ்வாறு நிலத் தொடர்புகளற்ற தமிழீழம் அமைப்பதாக ரீல் விடுவதற்கு ஒரு ஸ்ராங்கான காரணம் இருக்கிறது. அது சர்வதேச நாடுகளில் உள்ள புலிகள் இயக்கம் சார்ந்தவர்கள் அந்தந்த நாட்டின் உதவியுடன் கைது செய்யும் பணியில் இலங்கை இராஜதந்திர ரீதியில் வெற்றி பெற்றுள்ளதால் தனது ஆட்டம் இன்னும் சில நாட்களுக்குத்தான் எனக் கே.பிக்குத் தெரியும்.
அவர் சர்வதேச பொலிசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டால் அவரை விடுவிக்கக்கோரி தலைவரைக் காப்பாற்ற புலிகளின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கியதைப்போல தன்னையும் காப்பாற்ற போராடுவர்களாயின் தானும் தப்பிக்க ஒரளவேனும் சாத்தியம் உள்ளதாக கணக்குப் போடுகிறார் கே.பி.
அதனை சாதாரணமாக தற்போது களைத்துப்போயுள்ள மக்கள் செய்ய மாட்டார்கள். எனவே ஒவ்வொரு நாட்டிலிலும் அதற்குப் பொறுப்பாக சிலரை நியமித்து சர்வதேசப் புலிகள் அமைப்பு என்று ஒரு சுத்து காதில் சுத்தி பணத்தையும் கலக்சன் பண்ணிவிட்டால் தன்னை பாதுகாப்பதற்காக அவர்களை வீதியில் இறங்கலாம் என்பது அவரது கணக்கு. புலிகளின் ஆதவாளர்களுக்கோ வேலை செய்வது ஐந்துதானே! நடந்தாலும் நடக்கும்.
எனவே இத்தகைய புலிகளின் எதிர்கால செயற்பாடுகளுக்கு குடைப் பிடிப்பதற்காகவும், நாங்கள் நல்லவர்கள் என தாங்களே சுய பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றுவதற்காகவும்தான் சிலர்கள் தங்களின் பாசிச வாதத்தை மறைக்க ஒரு கருத்தில் புலிகளின் கடந்த கால தவறுகளை எதிர்ப்துபோல் எழுதி ஆனால் நிஜமாக புலிகளை ஆதரித்து ஆய்வுகளை அவர்களே செய்து அதனை அவர்களே பிரசுரித்து ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருக்கின்றனர் தமிழர் தன்மானத்தினை.
இந்த வினோத உடைப் போட்டி எதற்கென்றால் அவர்களின் கடந்தகால பாசிச செயற்பாடுகளை மறைத்து நவீன பாசிசவாதத்தை மக்களுக்குள் புகுத்தி தங்களின் வயிற்றைக் கழுவிக் கொள்வதுடன். இனி இலங்கையில் மிஞ்சியிருக்கும் தமிழர்களையும் ஒரு பதட்டத்துடன் வாழ வைத்து அவர்கள் படும் கஸ்டங்களில் தாங்கள் குளிர் காய்வதற்காகும்.
எனவே தங்களின் இந்தச் செயற்பாடுகளை தோலுரிப்பவர்களுக்கு புதிய பட்டங்கள் தற்போது வழங்கப் படுகின்றது. இதில் என்ன வேடிக்கை என்றால் பழைய துரோகிப் பட்டம் பெற்றவர்களுக்கும் தொடர்ந்து புதிய பட்டங்கள் வழங்கப்படுவதால் அவர்கள் கலாநிதிகளாக மாறிவிட்டனர்.
இனி இன்னும் பல புதிய குழுக்கள் உருவாகப் போகின்றன இலங்கையிலுள்ள புலிகள் தேசிய கூட்டணிக்குள் குத்துவெட்டுகள் ஆரம்பமாகி விட்டது, அடுத்து புலம்பெயர் புலிகள் கூட்டணிகுள்ளும் மட்டுமல்லாது சிறிய சிறிய கலக்சன் பேர்வழிகள் வரை அவை நீண்டு செல்கின்றன. ஆகவே இதுவரை இதில் ஏதோ ஒரு பட்டத்தைப் பெற்றவர்கள்தான் பாக்கியசாலிகள் இனி வெளியில் இருப்பவர்கள் எவருக்கும் பட்டம் வழங்க முடியாத நிலையை அவதானிக்க முடிகிறது. காரணம் தற்போது கையிருப்பிலுள்ள பட்டங்கள் தங்களுக்குள் இனி பட்டங்கள் வழங்கிக் கொள்வதற்கே போதுமானதாக உள்ளதாக தெரிகிறது.
இந்தப் பட்டம் வழங்கும் வழக்கத்தை ஆரம்பித்துவைத்த சூத்திரதாரியான புலிகள் என்ற பல்கலைக் கழகத்தின் புலனாய்வுத்துறை மேலாளர் “பொட்டு” அவர்களுக்கு இந்தப் பட்டம் இல்லாவிட்டாலும் தேசியத் தலைவர் வழங்கிய மாமனிதர், தேசத்தின் குரல், வீரவேங்கை, லெப்டினன்,கேணல் என எதுவும் வழங்கப் பாடாத நிலையிலேயே மாயமாகியுள்ளார். நாங்களும் அவரைத் தேடிப் பார்த்தோம் அட்ரஸில்லை. அவரைத் தேடிப் பிடித்து முதலில் அவருக்கு ஏதாவது பட்டம் வழங்குங்கள் பல்கலைக்கழகங்களே!
தற்போதைய சூழலில் பல்கலைக்கழகங்கள் போகின்ற போக்கைப் பார்த்தால் அவர்கள் மற்றவர்களுக்கு வழங்குகின்ற பட்டங்களில் ஒன்றை தேசிய தலைவருக்கும் வழங்கி அவரை இவர்களின் மனங்களில் இருந்தும் புதைத்துவிட்டு மக்கள் முன் நாங்கள் தலைவருக்கே பட்டம் வழங்கியவர்கள்! ஜனாநாயகவாதிகள்! எங்களை நம்புங்கள்! என்று கெஞ்சுவார்கள் போலதான் தெரிகிறது. தயவு செய்து அதை மட்டும் செய்துவிடாதீர்கள் தலைவருக்கு அந்த “தலை”வர் பட்டம் மட்டுமே இருக்கட்டும்.
ஏனெனில் உலகில் பல தலைவர்கள் தோன்றி மறைந்துள்ளனர் மகா அலெக்ஸாந்தர், மாவீரர் நெப்பொலியன், ஹிட்லர், முசொலினி எனப் பலர். ஆனால் இந்த நால்வரில் ஒருவரின் பாதிப்பு உலகில் தோன்றிய எல்லா அரசியல் தலைவர்களிடத்திலும் இருந்துள்ளது. இவர்கள் நால்வரும் இராணுவ மற்றும் போரியல் ரீதியில் சமமான தகமைகளையும் வீரத்தையும் கொண்டவர்களே! ஆனால் இவர்கள் மக்களைக் கையாண்ட முறைதான் சிலரை ஜனநாயக வாதிகளாகவும் சிலரை பாசிச வாதிகளாகவும் உலகிற்குக் காட்டியது
இந்த ரீதியில் நோக்குமிடத்து உங்களின் தலைவர் ஹிட்லரை ரோல்மொடலாக்க் கொண்டு உலகப் புகழ் பெற்ற “பாசிசவாதி” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளதால் வேறு எந்தப் பட்டமும் அவருக்குத் தேவையில்லை. எனவேதான் அவரைத் தலைவர் பட்டத்துடன் மட்டும் விடுங்கள் அப்போதுதான் வருங்கால சந்ததியினர் இவரை இனங்கண்டு கொள்வர்.
தற்போதைய புலம்பெயர் தேசத்தின் புலிகளின் ஆதரவார்களை நோக்கும்போது அவர்களுக்குள் ஒரு குழுவுக்கு ஒரு தேசிய தலைவரும் ஒரு புலனாய்வுத் தலைவரும் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு நாலு தொடக்கம் ஐந்து பேயாட்டும் குழுக்கள் உருவாகியுள்ளன.
இனி புலம்பெயர் தேசங்களில் உள்ள பேயர்களை இவர்கள் பேயாட்டப் போகிறார்கள் அத்துடன் பல மண்டையில் போடுதல்களும் பட்டமளிப்புக்களும் இடம்பெறப்போகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் பல உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு வவுனியா வாழத்துடிப்போர் சங்கம் என்ற பெயரில் “இனியும் சாவதில்லை நாங்கள் வாழ வேண்டும்” என்ற தலைப்பில் சூத்திரம் இணையத்தளத்தில் ஒரு கணக்கறிக்கை வெளியாகியிருந்தது அதில் வெளிநாட்டுப் புலிகள் பதுக்கியுள்ள மக்களின் பணத்தின் விபரம் தெரிவிக்கப்பட்டிருந்தது! ஆக! அவர்களுக்குள் ஆரம்பித்துவிட்டது குத்துவெட்டு!
இப்படி நாலுபேர்களும் சேர்ந்து ஒன்றாக செயற்பட முடியாதவர்கள்தான் தவித்துக் கொண்டிருக்கும் தமிழருக்காக போராடி தீர்வு பெற்றுத்தரப் போகிறார்களாம்!. நல்லாத் சுத்துகிறார்கள் ஐயா! சுத்துகிறார்கள்! சொந்த யுனிட்டிலேயே அடயாளம் தெரியாமல் ஆக்கிட்டானுகளையா தமிழர்களை.
“உங்களை நீங்கள் சீர்திருத்திக் கொள்ளாதவரை உலகம் உங்களை உயர்த்தாது”
0 comments :
Post a Comment