தலைப்பாகை அணிய தடை: அமெரிக்க ராணுவத்துக்கு சீக்கியர்கள் எதிர்ப்பு
அமெரிக்க ராணுவத்தில் சீக்கியர்களும் பணிபுரிகிறார்கள். அவர்களின் மத அடையாளமாக தாடி வளர்த்தும், தலைப்பாகை அணிந்தும் வருகிறார்கள். ஆனால் அடுத்த மாதம் (ஜூலை) முதல் அவர்கள் தலைப்பாகை அணியக் கூடாது. தாடியை எடுத்து விட வேண்டும் என தடைவிதித்துள்ளது.
இதற்கு ராணுவத்தில் பணிபுரியும் கேப்டன்கள் கமல்ஜித்சிங் கலாசி, கேத்தீப் சிங் உள்பட வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் தொடர்ந்து தாடியுடனும், தலைப்பாகை அணிந்தும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இவர்களின் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக அமெரிக்க ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டோனிடெலன்ஜி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment