Wednesday, June 17, 2009

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு பயிற்ச்செய்கை காணிகள்.

வவுனியா மனிக்பார்ம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு பயிற்ச்செய்கைக்காக 1000 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக காணி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. பயிற்செய்கையில் ஆர்வமுடையவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள், விதைகள், உரவகைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்குத் தேவையான பொருத்தமான காணிகள் படையினரின் இறுக்கமான மேற்பார்வையில் இனங்காணப்பட்டு வருவதாகவும் காணி அபிவிருத்தி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com