வெளிநாட்டில் உள்ள இலங்கையரை திருப்பி அழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. - போகல்லாகம.
வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம்கோரும் இலங்கையர்களுக்கு தஞ்சம் வழங்குவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் றோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் அதிகம் தஞ்சம்கோரியுள்ள நாடுகளான அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் சில நாடுகளுக்கும் இது தொடர்பாக தமது தூதரகங்கள் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் வாழ முடியாது என தஞ்சம் கோரியிருந்தவர்களை திருப்பி அனுப்புமாறு வேண்டப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment