Friday, June 5, 2009

ராஜீவ் கொலை விசாரணை மேற்கொள்வோரின் பணிக்காலத்தை நீடிக்குமாறு சி.பி.ஜ கோரிக்கை.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைப்பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் சி.பி.ஜ தலைமையிலான விசாரணை குழுவினரின் பணிக்காலத்தை நீடிக்குமாறு மத்திய அரசிற்கு சி.பி.ஜ கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்படி குழுவில் ஜ.பி மற்றும் ரோ புலனாய்வு பிரிவின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். எதிர்வரும் 31ம் திகதியுடன் இவர்களின் பணிக்காலம் முடிவடையவுள்ளது.
இருந்த போதும் இந்த கோரிக்கை மீது மத்திய அரசு இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜெயின் கமிசன் பரிந்துரைப்படி கடந்த 1998ஆம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சியின் போது இக் குழு அமைக்கப்பட்டு, பெங்களுரில் பிணமாக கிடந்த முக்கிய குற்றவாளியான ஒற்றைக்கண் சிவராசனுக்கு இச்சதித்திட்டத்தில் உள்ள தொடர்பு, சர்சைக்குரிய அரசியல் சாமியார் சந்திரசாமியாரின் பங்கு போன்ற புகார்கள் பற்றி விசாரணை நடத்தும்படி பரிந்துரைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment