Friday, June 12, 2009

இலங்கையில் பிரான்ஸின் மருத்துவப்பணி நிறைவுறுகின்றது.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்காக பிரான்ஸ் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவந்த தற்காலிக மருத்துவப் பணி நிறைவு பெறுவதாக பிராண்ஸ் தூதரகப் பேச்சாளர் Hugues Capet தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களிலே செயற்படுகின்ற ஏனைய நிவாரண அமைப்புகளுடன் இணைந்து நாம் மேற்கொண்ட பணி கடந்த புதன் கிழமையுடன் முடிவுற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

100 கட்டில் வசதிகளுடன் செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மேற்படி தற்காலிக வைத்தியசாலையில் 45 நாட்களில் 250 சத்திரசிகிச்சைகள் இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகல்லாகமவிற்கும் பிராண்ஸ் அமைச்சர் Bernard Kouchner இற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து நிறுவப்பட்ட எமது தற்காலிக வைத்தியசாலை ஊடாக வன்னியில் பாதிக்கப்பட்ட 2500 மக்களுக்கு சிகிச்சையளித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com