உறுதிமொழிகளை நிறைவேற்ற ராஜபட்சேவை வலியுறுத்துவோம்: ப.சிதம்பரம்
சென்னை, ஜூன் 13- இலங்கைத் தமிழர்களை மீண்டும் அவர்களது இருப்பிடங்களில் மீண்டும் குடியமர்த்துவது, சமவுரிமை அளிப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை ராஜபட்சே நிறைவேற்ற தொடர்ந்து இந்தியா வலியுறுத்தும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதைத் தெரிவித்தார்.
"ராஜபட்சே தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவார் என்று இப்போது வரை நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கையில் தமிழர்கள் சமவுரிமை பெறுவது தான் எங்களது நோக்கம்" என்றும் இந்தியா தனது முழுச் செல்வாக்கைப் பயன்படுத்தி உலக நாடுகளுடன் சேர்ந்து வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை , சம அந்தஸ்து பெற்றுத்தருவதுதான் எமது நோக்கம் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
0 comments :
Post a Comment