பல குற்றங்களுக்கு பின்னணியில் அரசு இருக்கின்றது. லக்ஸ்மன் கிரியல்ல
இலங்கையில் இடம்பெற்றுள்ள பல குற்றங்களுக்கு பின்னணியில் அரசு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கூறியுள்ளார். எதிர்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் கடந்த 12ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் பேசுகையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் உள்ள 99 வீதமான உத்தியோகித்தர்கள் நேர்மையானவர்கள். ஆனால் இங்கு இடம்பெற்றிருக்கின்ற அதிகமான குற்றச்செயல்களின் பின்னணியில் அரசு இருக்கின்ற காரணத்தினால் அவர்களால் விசாரணைகளை முன்னெடுக்க முடியவில்லை என்றார்.
இலங்கையில் இடம்பெற்ற பல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பத்திரிகையாளர்களினதும் கொலைகள், கடத்தல்கள் மற்றும் பத்திரிகை அச்சகங்கள் தீவைப்புடன் அரசு சம்பந்தப்பட்டிருப்பதாக நேரடியாக குற்றஞ்சாட்டினார்.
0 comments :
Post a Comment