ஈபிடிபி யினரை சுதந்திரக் கட்சியுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈபிடிபி யினரை சுதந்திரக்கட்சியுடன் இணையுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஈபிடிபி யின் தலைவர் தனது கட்சி உறுப்பினர்களுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையும் போது, வினாயக மூர்த்தி முரலிதரனுக்கு கட்சியின் உபதலைவர்களில் ஒருவர் பதவி வழங்கப்பட்டதுபோல், டக்ளஸ் தேவானந்தாவிற்கு வடமாகாணத்திற்கான பிரதான அமைப்பாளர் பதவி வழங்கப்படும் என தெரியப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
அரசின் இந்த வேண்டுதல் தொடர்பாக டக்ளஸ் தமது கட்சி உறுப்பினர்களுடன் பேசவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் அரசினால் டக்ளசுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வேண்டுதல் தொடர்பாக கருணா அதிருப்தி அடைந்துள்ளதாக கட்சியின் உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றது. கருணா வட மாகாணசபை அமைக்கப்படும் போது அதில் ஒர் பெரிய பொறுப்பை தான் கைப்பற்ற திட்டமிட்டிருந்தாகவும், டக்ளஸ் சுதந்திரக் கட்சியுடன் இணையும் போது தனது எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகலாம் என கருதுவதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment