Sunday, June 14, 2009

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கண்டெடுப்பு பிரிகேடியர் உதய நாணயக்கார

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மறைத்து வைக்கப்ப்ட்டுருந்த ஏராளமான ஆயுதங்களை இலங்கை போலீசார் நேற்று கைப்பற்றியுள்ளனர். முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், திருகோணமலையில், சேருநுவர பொலிஸ் பகுதியில், பொலிஸார் ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

T56 ரக துப்பாக்கிகள் 210, இலகுரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தற்கொலை அங்கிகள் ஆகியவை அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு கிழக்கு மாகாணத்தில் ஒரு இடத்தில், ஒரே நாளில் கைப்பற்றப்பட்ட அதிகளவிலான ஆயுதங்கள் இவைதான்.

Thanks BBC

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com