கல்முனை தமிழ் பாடசாலை மாணவர்கள் பகிஸ்கரிப்பில் குதிக்கின்றனர்.
கல்முனை கல்வி வலையத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலை மாணவர்கள் இன்று பாடசாலை பகிஸ்கரிப்பில் இறங்கவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ் பாடசாலைகளில் அதிகரித்து வருகின்ற முஸ்லிம் ஆசிரியர் நியமனங்கள், தமிழ் ஆசிரியர்கள் சட்டக்கு மாறாக இடமாற்றம் செய்யப்படல், தமிழ் பாடசாலைகளில் விளையாட்டு ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ள முஸ்லிம் இளம் ஆசிரியர்களின் தவறான அணுகு முறை என்பவற்றை கண்டித்தே இப் பகிஸ்கரிப்பு இடம்பெறவுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் செல்வாக்கினூடாக அம்பாறை தமிழ் பிரதேசங்களின் அரச நிர்வாக கட்டமைப்புகளில் உள்ள தலைமைப் பொறுப்புக்களை கைப்புற்றிக்கொண்ட முஸ்லிகள் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதாகவும், தமிழ் மக்களின் வளங்களைச் சுரண்டுவதாகவும் பலத்த குற்றச்சாட்டுக்கள் அம்பாறைத் தமிழ் மக்களிடமிருந்து கிளம்பி வருகின்றது.
கல்முனை முன்னணி பாடசாலை ஒன்றின் சிரேஸ்ட மாணவர் ஒருவர் இலங்கைநெற் இற்கு இடம்பெற இருக்கும் பகிஸ்கரிப்பு தொடர்பாக கூறுகையில், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளராக முஸ்லிம் இனத்தவர் ஒருவர் இருக்கின்றபோது தமிழ் பாடசாலைகளில் திட்டமிட்ட முறையில் அதிக முஸ்லிம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, இங்குள்ள பாடசாலை நிர்வாகங்கள் மற்றும் மாணவர்களிடைய குளப்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றது. ஆசிரியர்கள் 8 வருடங்களுக்கு ஒரே பாடசாலையில் கடமையாற்ற முடியும் என்கின்ற நடைமுறை இருக்கின்ற போது கல்முனை கல்வி வலயத்தில் உள்ள சிறந்த பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்வெற்றிடம் முஸ்லிம் ஆசிரியர்களால் திட்டமிட்ட முறையில் நிரப்பட்டு வருகின்றது. 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்தும் தமது விருப்பிற்கேற்ப அதே பாடசாலையில் கற்பிக்கலாம் என்ற நியதி இருக்கின்றபோதும் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றபோது மிகுந்த அனுபவம் கொண்ட சிறந்த ஆசான்களை இழக்கும் நிலைமை உருவாகின்றது. அத்துடன் விளையாட்டு ஆசிரியர்களாக தமிழ் பாடசாலைகளில் நியமனம் பெற்றுள்ள இளம் வயதினரான முஸ்லிம் இளைஞர்களின் தவறான அணுகு முறைகள் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் பெரும் கசப்பை ஏற்படுத்தி வருகின்றது என தெரிவித்த அம்மாணவன்,
இது தொடர்பாக எமது எதிர்ப்பை நாம் வெளிக்காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். ஆனால் இது அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்கோ மாணவர்களுக்கோ எதிரான போராட்டம் என அர்த்தப்படுத்தப்பட இடமில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் திட்டமிட்ட சதிகள் அம்பலப்படுத்தப்படவேண்டும், இது தொடர்பாக மத்திய அரசிற்கு தெரியப்படுத்தப்படவேண்டும் என்பதுவே எமது நோக்கம் என்றும் தொவித்தார்.
0 comments :
Post a Comment