இலங்கையில் முதலாவது பன்றிக்காச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நாட்டில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கை வந்த 8 வயது குழந்தை ஒன்று பன்றிக்காச்சல் எனப்படும் ஏ எச்1என்1 எனும் கிருமியினால் இனால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பன்றிக்காச்சல் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்தடவை என அறிவித்துள்ள அமைச்சகம் நோயாளி தொற்று நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் பிரத்தியேக இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்நோய் பரவாமல் தடுக்க வாய்ப்புண்டு என வைத்தியசாலை வட்டாரங்கள் வைத்தியசாலை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றது.
இலங்கையின் பன்றிக்காய்ச்சல் பற்றிய தற்போதைய நிலைமையைக் குறித்து அனைத்து பிராந்திய மருத்துவ நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன் மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேநிலையில், போதியளவு மருந்துகள் கையிருப்பிலிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் ஊழியர்கள் இதற்காக தயார் நிலையில் வைக்ப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் நோய் பரவுகை தடுப்புப் பிரிவு பன்றிக்காய்ச்சலைக் குணப்படுத்தும் மற்றும் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். நாட்டில் பன்றிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ள முதலாவது சிறுவன் தங்கியிருந்த இடம் அவனுடன் நெருங்கிப் பழகியோர் மற்றும் அவர்களுடன் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் பயணித்தோர் குறித்தும் அமைச்சின் நோய் பரவுகை தடுப்புப் பிரிவு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் தொடர்ச்சியான இருமல், தொண்டை அரிப்பு, தலைவலி, காய்ச்சல், உடல் வலி என்பன இருப்பின் அலட்சியமாக இருக்க வேண்டா மெனவும் எச்சில், கண்ணீர் என்பன மூலமே இந்நோய் பரவுவதனால் கைக்குட்டை உபகோகித் தல், கைகளை அடிக்கடி கழுவுதல் மூலம் இவ்வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியுமெனவும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் விசேட நிபுணர் சுதத்பீரிஸ் மற்றும் வைத்தியர் கீத்தானி விக்கிரமசிங்க ஆகியோர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment