Tuesday, June 2, 2009

வைகோவுக்கு கருணாநிதி வக்கீல் நோட்டீசு

முதல்- அமைச்சர் கருணாநிதி சார்பில் அரசு வக்கீல் சரவணன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சினிமா இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக நீங்கள் (வைகோ) எனது கட்சிக்காரர் முதல்- அமைச்சர் கருணாநிதி மீது அவதூறாகவும், கீழ்தரமாகவும் பேசியுள்ளீர்கள். இது தொடர்பாக புரசைவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது முதல்-அமைச்சர் கருணாநிதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் அவரது நன்மதிப்பை குலைக்கும் வகையில் பேசிய நீங்கள் 24 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment