Thursday, June 18, 2009

லண்டனில் இலங்கையர் ஒருவர் இனரீதியாக துன்புறுத்தலுக்குள்ளானார்.

லண்டன் Dunscroft இல் உள்ள கடையொன்றின் முகாமையாளரான இலங்கையர் ஒருவர் இனரீதியான வார்த்தை துஸ்பிரயோகங்களினால் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளதாக South Yorkshire பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கடைக்குவந்த பெண் ஒருவர் இரு பொருட்களை
வாங்குவற்கு தெரிவு செய்துகொண்டு ஒரு பொருளுக்கு பணத்தை செலுத்தியுள்ளார். இவ்விடயம் அங்கிருந்த ஊழியர்களால் முகாமையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அப்பெண்ணை அணுகிய முகாமையாளர் அப்பெண்ணினால் இன ரீதியாக தாறுமாறான வசைபாடலுக்கு உள்ளாகியுள்ளார்.

14 வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் முகாமையாளர் இச்செயலினால் மிகவும் மனவுளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் பேச விரும்புகின்றனர்.

அப்பெண்ணது புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் அவரை இனம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் தகவலை PC Martyn Thomas at Stainforth Police Station on 01302 385153, or call Crimestoppers on 0800 555 111. என்கின்ற இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com