நோர்வேயில் பணம் கொடுத்த மக்களை காட்டிக்கொடுக்கும் புலிகள்.
நோர்வே அரச தொலைக்காட்சியில் தமிழ் மக்களிடம் புலிகள் தொடர்பான கருத்துக்கள் பெறப்பட்டு ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றது. அந் நிகழ்வுகளின்போது முன்னாள் புலிகள் மற்றும் ஜனநாயகத்தை நேசிப்போர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இத்தனை காலமும் புலிகள் மேற்கொண்டு வந்த அராஜகங்களை வெளிபடுத்திவருகின்றனர்.
இந்நிலைமை நோர்வேயில் புலிகளின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் என அஞ்சும் நோர்வே புலிகளினால் நோர்வே ஒஸ்லோவில் உள்ள ஸ்ரொப் பிரஸ் என்கின்ற விடுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை 12 மணியளவில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்களான பலராலும் தெருச் சண்டியனாக பேசப்படும் சிறி எனப்படும் சிறி நமசிவாயத்தினால் நிர்வகிக்கப்படும் நேர்ர்வே தமிழ் சங்கம் , நோர்வே இந்து காலாச்சார மன்றம் , தமிழ் கத்தோலிக்க சபை , புலிகள் தொடர்பாக நோர்வே பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு மக்களை கேட்டுவரும் ராஜாபாலசிங்கம் அவர்களால் நிர்வகிக்கப்படும் அன்னை பூபதி பாடசாலை , பொன்தியாகத்தின் மகள் மேரி பிராஸ்சிஸ் இனால் நாடாத்தப்படுகின்ற தமிழ் மகளீர் அமைப்பு , பஞ்சலிங்கம் யோகராஜாவினால் நிர்வகிக்கப்படும் தமிழ் சுகாதார சங்கம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய அமைப்புக்களை இணைத்து பத்திரிகையாளர் மாநாடு நிகழ்த்தப்பட்டது.
அங்கு பத்திரியாளர்களிடம் பேசிய அவர்கள், புலிகளின் பல அராஜகங்களையும் நியாயப்படுத்தியதை உணரமுடிந்திருந்தது. அங்கு பத்திரிகையாளர்களின் கேள்விக்கணைகளுக்கு முகம் கொடுக்கமுடியாத அவர்கள் தாம் பயங்கரவாதத்திற்கு உதவி புரிந்ததாக ஒத்துக்கொண்டுள்ளனர்.
நீங்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக சேகரித்த பணத்தை புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உபயோகிக்க உடந்தையாக இருந்துள்ளீர்களே என கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள், தாம் 30 வருடங்களாக மக்களிடம் தொலைபேசிகளுடாகவும் வங்கிகளுடாகவும் பணம் வசூலித்ததாகவும் அப்பணத்தில் ஒரு தொகுதி புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவிற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியதுடன், இவ்விடயத்தை மக்கள் நன்கறிந்திருந்தனர் எனக் கூறி பணத்தை வழங்கிய மக்கள் மீது குற்றத்தைச் சுமத்தினர்.
இப்பணத்தில் புலிகளுக்கு ஆயுதம் வாங்கியதான குற்றச்சாட்டு பொலிஸாரினால் எம்மீது சுமத்தப்படும் பட்சத்தில் இதற்கு உடந்தையாக இருந்த மக்களின் தகவல்களை பொலிஸாருக்கு வழங்கி அவர்களின் விசாரணகளுக்கு ஒத்துழைக்க நாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
புலிகளின் அராஜகம் நோர்வே தமிழ் ஊடகவியாலர்கள் மீதும் பிற ஜனநாயகவாதிகள் மீதும் எல்லைகடந்து சென்றபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அங்கு தோற்றுவித்திருக்கும் நிலைமைகளை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகளால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் நோர்வே உள்நாட்டு அரச பத்திரிகைளில் வெளியானதை தொடர்ந்து நோர்வேயில் புலிகளுக்கு பணம் கொடுத்த மக்கள் அச்சம் அடைந்துள்ளதுடன் புலிகள் மீது பெரும் விசனம் கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment