கிழக்கில் ஆயுதங்களை பாரமளிப்பதற்கு பொதுமன்னிப்புக்காலம்.
கிழக்கில் உள்ள தமிழ் , முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கள் தமது ஆயுதங்களை கையளிப்பதற்கான பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் யூலை 2ம் திகதியுடன் முடிவடைகின்றது என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பொது மன்னிப்பு கால அவகாசம் நீடிப்பு தொடர்பாக, காத்தான்குடி காலாச்சார மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் முஸ்லிம் மதத்தலைவர்களுடன் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி சிறிநாத் ராஜபக்ச மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துரையாடல் ஒன்றை நாடாத்தியுள்ளனர்.
அதேநேரம் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்றின் உறுப்பினர்கள் ஏழுபேர் காத்தான்குடிப் பிரதேசத்தில் கடந்தவாரம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையின் முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்றைச் சேர்ந்த மேலும் பலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment