தீவிரவாதத்தை அடக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை: எஸ்.எம்.கிருஷ்ணா
`தீவிரவாதத்தை அடக்கும் வரை, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை'' என்று, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். இது குறித்து அவர் டெல்லியில் நிருபர்களிடம் பேசும்போது, ``தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதம், பாகிஸ்தான் மண்ணில் இருந்து உருவாகிறது. இதை அந்த நாடு அடக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். எஸ்.எம்.கிருஷ்ணா மேலும் கூறுகையில், ``மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான ஜமா-உத்-தவா என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீப் மொகமது சாகீத்தை, பாகிஸ்தான் அரசு, வீட்டு காவலில் இருந்து விடுவித்து விட்டது. இதன் மூலம் தீவிரவாதத்தின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை, பாகிஸ்தான் அரசு மறந்து விட்டது என்றே கூற வேண்டும்.
0 comments :
Post a Comment