புலிகளின் நோர்வே பொறுப்பாளர் யோகாஜா பாலசிங்கம் தனது தொழில்கட்சி அங்கத்துவத்தை பறி கொடுக்கலாம்.
விடுதலைப் புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு எனும் அமைப்பின் முக்கியஸ்த்தர் என பலராலும் அறியப்படுபவரும், நோர்வே தொழில் கட்சி அங்கத்தவருமான யோகராஜா பாலசிங்கம் தனது கட்சி உறுப்புரிமையை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது. நோர்வே சட்டதிட்டங்களின் அடிப்படையில் அரசியல்வாதி ஓருவர் பொய்பேசி நிருபிக்கப்பட்டால், அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டு அவரது கட்சி உறுப்புரிமை பறிக்கப்படுவது நியதியாகும்.
நோர்வே தேசிய தொலைக்காட்சியில் புலிகள் தொடர்பான கருத்துக்கணிப்பொன்று இடம்பெற்று வருகின்றது. அந்நிகழ்வில் கடந்தவாரம் கலந்து கொண்ட யோகராஜா பாலசிங்கம் அவர்களிடம், ஐரோப்பாவில் புலிகளின் பிரதிநிதிகள் யார் எனக் கேட்டபோது, பதிலளித்த அவர், ஐரோப்பாவில் புலிகளின் பிரதிநிதிகள் எவரும் இல்லை என தெரிவித்துள்ளார்.
நோர்வே உட்பட பல நாடுகளிலும் புலிகள் தமது பணிமனைகளை வைத்து செயற்பட்டு வருகின்றனர் என்பது பொதுவாக யாவரும் அறிந்தவிடயம். இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் நிகழ்வுகளின் போது புலிகளது பிரதிநிதிகள் ஐரோப்பாவில் இருக்கின்றனர் என்ற விடயம் ஆதாரங்களுடன் தெரியப்படுத்தப்பட்டு தொழில் கட்சி அங்கத்தவரான யோகராஜா பாலசிங்கம் பொய்யான தகவல்களை மக்களுக்கு வழங்கினார் என்பது நிரூபிக்கப்படும்போது அவருடைய அரசியலில் ஈடுபடும் உரிமை சட்டரீதியாக மறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நோர்வேயில் உள்ள அன்னை பூபதி பாடசாலையில் யோகராஜா பாலசிங்கம் தலமை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். இப்பாடசாலை புலிகளினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததொன்றாகும். இப்பாடசாலை புலிகளினாலேயே நிர்வகிக்கப்படுகின்றது என்பதற்கான ஆதாரங்கள் பலவும் நோர்வேயில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரினால் திரட்டப்பட்டு அங்குள்ள புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment