இடைத்தங்கல் முகாம்களில் வயோதிபர்கள் இறக்கின்றனர். அமைச்சர் லயனல் பிரேமசிறி.
இடைத்தங்கல் முகாம்களில் வயோதிபர்களர் இறக்கின்றனர். ஆனால் அது ஒன்றும் வழமைக்கு மாறான செயல் அல்ல என சமூக சேவைகள் பிரதி அமைச்சர் லயனர் பிறேமசிறி தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் ஏறத்தாழ 270000 மக்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்களும் சிறுவர்களுமே இந்நிலையில் இயற்கை மரணம் என்பது தவிர்க்க முடியாதது என அவர் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்த அவர்,
இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களது வாழ்கைத் தரமானது அவர்களுடைய நிஜவாழ்வுடன் ஒப்பிடுகையில் குறைவானது அனால் அரசு முடியுமானவற்றை செய்து வருகின்றது. வயோதிபர்களை மீள குடியமர்த்தல் மற்றும் அவர்களது தேவைகளைக் கவனிக்கும் விடயங்களை இராணுவத்தினரிடம் இருந்து பொலிஸார் பாரமெடுத்துள்ளனர். அத்துடன் வயோதிபர்களை அவர்களது சொந்த பந்தங்களிடம் ஒப்படைக்கும் போது
அவர்கள் தவறாக பிரயோகிக்கப்படக் கூடிய ஆபத்துக்களையும் நாம் பரிசீலித்து வருகின்றோம் என அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment