Saturday, June 6, 2009

பிரதம நீதிபதியாக மேலுமோர் என் டீ சில்வா.

நீதித்துறையில் இலங்கையில் அதியுயர் பதவியாகிய பிரதம நீதியரசர் பதவியில் இருந்து சரத் என் சில்வா அவர்கள் 7ம் திகதி யூன் மாதம் ஓய்வு பெறும் நிலையில், ஜோசப் அசோக என் டீ சில்வா அவர்கள் புதிய பிரதம நீதியரசராக நியமனம் பெறுகின்றார்.

1971ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இவர், 1972ம் ஆண்டு உச்ச நீதிமன்றில் சட்டத்தரணியாக சத்தியப்பிமாணம் செய்துகொண்டதுடன் இலங்கை சட்டத் துறையிலே பல பதவிகளை வகித்து, 2001 ஆண்டு உச்ச நீதிமன்றின் மேலதிக விசாரணை நீதிபதிகளுக்கான தலைவராக விளங்கியுள்ளார்.

ருவண்டாவில் நிறுவப்பட்டிருந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு அன்றைய ஐ.நா செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களால் அசோக என் டீ சில்வா அவர்கள் நிரந்தர நீதிபதியாக 2004ம் ஆண்டு நியமனம் பெற்று, அங்கிருந்த 16 நீதிபதிகளுள் ஒருவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச சட்டவியலில், விசேடமாக இனஅழிப்பு, படுகொலைகள் போன்றவற்றில் மிகவும்
பெயர்போன இவர் இன்று இப்பதவிக்கு நியமனம் பெற்றிருப்பாதானது இலங்கையில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினை விவகாரங்களை கையாள்கையில் நீதித்துறை நிமிர்ந்து நிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com