ஏ9 பாதை திறந்து விடப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனங்களுக்கு ஏ9 பாதை திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை 17ம் திகதி அத்தியாவசிய சேவைகள் திணைக்களம் யாழ் மக்களுக்கு தேவையான பொருட்களை 20 லொறிகளில் எடுத்துச் சென்றுள்ளது.
கடந்த 24 வருடங்களாக புலிகளினால் பூட்டி வைக்கப்பட்டிருந்த பாதை இன்று மக்களின் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி ஏ9 பாதையின் முழுப்பகுதியும் படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்தபோதும் அது படையினரின் தேவைக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது.
இவ்வாறு இப்பாதை திறக்கப்பட்டு பொருட்கள் தரைமார்க்கமாக அனுப்பப்படும்போது யாழ் மக்களின் வாழ்கைத்தரம் உயரும் என்பதுடன் யாழ் மக்கள் சாதாரண விலையில் பொருட்களையும் பெற்றுக்கொள்ள உதவும்.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் அப்பாதை பயணிகளின் பாவனைக்காக திறந்துவிடப்படும்போது மேலும் அவர்களது வாழ்க்கைத்தரம் உயரும் என நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment