ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு தேர்தல்களுக்காக 7 அமைச்சர்கள் கொண்ட விசேட குழு ஒன்றை அமைத்துள்ளது.
இடம்பெற இருக்கின்ற வடக்கு தேர்தல் விடயங்களை கண்காணிக்கும் பொருட்டு ஆழும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏழு அமைச்சர்களைக் கொண்ட விசே குழு ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வினால் நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாக்க தலமை தாங்கும் இக்குழுவில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமால் சிறிபால டீ சில்வா, சுசில் பிறேம ஜெயந்த, டலஸ் அழகப்பெரும, டினேஸ் குணவர்த்தன, கலாநிதி ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரையே ஜனாதிபதி தனது மியன்மார் விஜயத்தின் முன்னர் தெரிவு செய்துள்ளார்.
0 comments :
Post a Comment