வவுனியா நகரசபைத் தேர்தல்: 6 கட்சிகளால் முகவர்கள் நியமனம் மு. கா.வின் நியமனம் நிராகரிப்பு
வவுனியா நகர சபை தேர்தலுக்கு ஆறு அரசியல் கட்சிகள் தமது அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர்களை நியமித்துள்ளது. அதே நேரத்தில் இரு சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார்.
முகவர்களுடைய விபரங்கள்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி றிசாட் பதியுதீன், ஐக்கிய தேசிய கட்சி டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா, இலங்கை தமிழரசு கட்சி. சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சுந்தரலிங்கம் வசந்தலிங்கம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வரதமூர்த்தி சிவரூபசர்மா, தமிழர் விடுதலைக் கூட்டணி விநாயகமூர்த்தி சகாயதேவன், முஸ்லிம் காங்கிரஸ் காலதாமதமாகி முகவருடைய பெயரை அறிவித்திருந்தது.
அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கற்குழியினைச் சேர்ந்த இராஜேந்திரம் அந்தோணிதாஸ், அதே இடத்தைச் சேர்ந்த இப்றாகிம் ஜீவராசா ஆகிய இருவரும் சுயேட்சைக் குழுவிற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர் எனவும் உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment