விசேட அதிரடிப்படையின் 60ம் அணி பயிற்சியை முடித்து வெளியேறிய நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி.
விசேட அதிரடிப்படையின் 60ம் அணி பயிற்சியை முடித்து வெளியேறும் நிகழ்வு விசேட அதிரடிப்படையின் களுத்துறை, கட்டுக்குறுந்த போர்ப்பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் பொலிஸ் மா அதிபர், விசேட அதிரடிப்படைத் தளபதி திரு. சரத் சந்திர மற்றும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு பேசிய ஜனாதிபதி, பயங்கரவாதத்தை இந்நாட்டில் இருந்து பூண்டோடு அழிக்கும் யுத்தத்தில் தமது ஒழுக்கத்தையும் வீரத்தையும் நிருபித்துக்காட்டிய விசேட அதிரடிப்படையில் நீங்கள் உங்களை இணைத்துக்கொள்வதையிட்டு பெருமைப்பட வேண்டும். விசேட அதிரடிப்படையினர் பயங்கரவாதிகளின் மனங்களில் பயத்தினை குடிகொள்ளவைத்து அவர்களை அம்பாறை மாவட்டத்தில் இருந்து முற்றாக விரட்டியடித்ததன் ஊடாக தமது பலத்தையும் திறமையையும் நிருபித்தனர். அத்துடன் அவர்கள் வடக்கிலே இடம்பெற்ற யுத்ததிற்கு முப்படையினருக்கும் பக்கபலமாக நின்றனர். படையினர் புலிகளுடன் சண்டையிட்ட போது விசேட அதிரடிப் படையினரே கிழக்கில் உள்ள மக்களை மீட்டு அங்குள்ள தற்கொலைதாரிகளின் ஊடுருவல்களை சிறந்த முறையில் கையாண்டிருந்தனர். புலிகள் விரக்கிதியின் எல்லைக்குச் சென்று எல்லைக் கிராம மக்களை தாக்க முற்பட்ட போது அவற்றை சிறந்த முறையில் முறியடித்தனர். விசேட அதிரடிப் படையினரின் இச் சேவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் அவர்களுக்கு வேண்டிய சகல தேவைகளையும் கடந்த 3 வருடங்களாக பூர்த்தி செய்து வந்திருக்கின்றோம்.
இன்று இப்படையணியின் வரலாற்று முக்கிய நிகழ்வொன்றில் உங்கள் முன் நான் நிற்பதையிட்டு மிகவும் சந்தோசமடைகின்றேன் என்றார்.
0 comments :
Post a Comment