30 கிலோ கிளேமோர்கள், குண்டுகள், ஆயுதங்கள் மீட்பு முல்லைத்தீவில் தொடர்ந்தும் தேடுதல்
முப்பது கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த கிளேமோர், பல்வேறு ரக மோட்டார் குண்டு கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
வெள்ளைமுள்ளி வாய்க்கால், சாலை, புதுக்குடியிருப்பு, குப்பிலான்குளம், பட்டிக்கரை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய பிரதே சங்களில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் தேடுதல் களை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித் தார்.
120 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் – 02, 80 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள்-02, 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள்-03, 60 மி.மீ ரக மோட்டார் குண்டுகள்-03, மிதிவெடிகள்-100, ரி-56 ரக துப்பாக்கிகள்-04, கைக்குண் டுகள்-05 மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment