Monday, June 22, 2009

26 பாதாளக் குழுக்கள் தென் மாகாணத்தில் இயங்குகின்றன. அரசியல்வாதிகள் பேருதவி.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரின் தகவல்களின் அடிப்படையில் இலங்கையின் தென்மாகாணத்தில் 26 பாதாளக்குழுக்கள் இயங்குவது தெரியந்துள்ளது. இவர்கள் சிரேஸ்ட அரசியல்வாதிகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளதாகவும் அவர்களின் உதவியுடன் ஓப்பந்தக் கொலைகள், கடத்தல்கள், போதைப்பொருள் வியாபாரம் என்பவற்றை மேற்கொண்டுவருகின்றனர்.

அத் தகவல்களின்படி கொழும்பு நகரில் 13 பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன. இவர்களின் செயற்பாடுகள் மாளிகாவத்தை, பொரல்ல, மோதர, தெமட்டகொட மற்றும் புளுமென்டல் பிரதேசங்களில் பிரதானமாக காணப்படுகின்றது. தென்மாகாணத்தின் மேற்கே 10 குழுக்கள் செயற்படுகின்றன. இவர்கள் பிரதானமாக கல்கிஸ்சை, மொறட்டுவ, நுகெகொட, கடுவெல, பாணந்துறை, களுத்துறை ஆகிய பிரதேசங்களிலும் தென்மாகாணத்தின் வடக்கே நீர்கொழும்பு, மினுவன்கொட, ஜா-எல ஆகிய பிரதேசங்களில் 3 குழுக்களும் செயற்படுவதாகவும் தெரியவருகின்றது.

இக்குழுக்களை கைது செய்ய முற்படும் பொலிஸார் பல அரசியல்வாதிகளின் அதிகார துஸ்பிரயோகத்திற்கு உட்படும் நிலைதோன்றியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com