இடைத்தங்கல் முகாம்களில் இருந்த 19 பேர் அங்கிருந்து தப்பியோடி ராமேஸ்வரம் சென்றடைந்தனர்.
இலங்கையில் இருந்து 19 அகதிகள் இந்தியா வந்தடைந்துள்ளதாக இந்துப் பத்திரிகை தெரிவித்துள்ளது. அவர்களில் 5 பெண்களையும் 5 குழந்தைகளையும் கொண்ட குடும்பம் ஒன்று வவுனியாவில் உள்ள முகாம்களில் இருந்து ஒழித்தோடி மன்னாரை அடைந்து அங்கு கிடைக்கப்பெற்ற வாடகை வள்ளமொன்றின் உதவியுடன் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளதாக இராமேஸ்வரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 31ம் திகதி முகாமிலிருந்து வெளியேறிய இவர்கள் மன்னாரில் உள்ள தீவொன்றில் கடற்படையினருக்கு பயத்தில் பகுங்கியிருந்து நேற்று முன்தினம் 03 யூன் ராமேஸ்வரம் பகுதியை அடைந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இவ் அகதிகள் இடைத்தங்கல் முகாம்களை விட்டு வெளியேறியதற்கான காரணம் யாது என பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 13 பேர் தாள்பாடு பிரதேசத்தில் இருந்தும், மூவர் பேசாலைப் பிரதேசத்தில் இருந்தும் படகொன்றை வாடகைக்கு பெற்றுக்கொண்டு வந்துள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment