13 ம் திருத்தச்சட்டம் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விளக்கவேண்டும். ஜேவிபி.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விளக்க வேண்டும் என ஜேவிபி யின் தலைவர் அமரவன்ச சோமவன்ச கேட்டுக்கொண்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை இலங்கை அரசியலின் வரலாற்று குப்பைக் கூட்டத்தில் போடவேண்டும் என ஜேவிபி யினரால் கேட்டுக்கொண்டதற்கு பதிலளித்த அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, 13 திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தமது முதலில் மாகாண சபை அங்கத்துவத்தை இராஜினிமா செய்யவேண்டும் எனவும். அரசு 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அரசின் கொள்கைளில் 13ம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதும் ஒன்றாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சோமவன்ச அவ்வாறான ஒர் கொள்ளைப்பிரகடணம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் வெளியிடப்படவில்லை எனவும் மக்கள் மஹிந்த சிந்தனைக்கே வாக்களித்தகாவும் மஹிந்த சிந்தனையில் 13ம் திருத்தச்சட்டம் அமுல்படுத்துவது தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜேவிபியின் இனவாதம் வரலாற்றுக் குப்பைத் தொட்டியினுள் சென்று கொண்டிருப்பதை கடந்த தேர்தல்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
0 comments :
Post a Comment