13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்க கோருபவர்கள் முதலில் மாகாண சபையில் இருந்து ராஜினிமா செய்யவேண்டும். அமைச்சர் யாப்பா
அரசியல் யாப்பின் 13ம் திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தயாராக இல்லை என நேற்று 17ம் திகதி இடம்பெற்ற பத்திரிகை மாநாட்டில் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் அபயவர்த்தன யாப்பா, 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்கும் படி கோருபவர்கள் முதலில் தாம் தமது மாகாணசபை உறுப்பினர் பதவிகளை இராஜினிமா செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் ஒருவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், 13ம் திருத்தச் சட்டத்தை இலங்கை அரசியல் வரலாற்றுக் குப்பைத் தொட்டிலில் போடுமாறு கேட்கப்பட்டுள்ளது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்வாறு கூறிய அவர், 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்க கோரும் நபர்கள் அத்திருத்தச் சட்டத்தில் உள்ள பல நன்மைகளை அனுபவித்து வருகின்றனர். எனவே அவர்கள் அப்பதவிகளை ராஜினிமா செய்ய வேண்டும். 13ம் திருத்தச் சட்டமானது இலங்கையில் உள்ள அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதற்படியாகும். அத்துடன் இத் திருத்தச் சட்டமானது இலங்கை பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டதொன்றாகும் என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment