13ம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்
-அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதி செயலரிடம் போகல்லாகம-
சிங்கப்பூரில் கடந்த வாரம் இடம்பெற்ற 8வது சங்ரி லா மாநாட்டின் போது அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிச் செயலர் ஜேம்ஸ் ஸ்ரைன்பேர்க் அவர்களுக்கு இலங்கை விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட 13ம் திருத்தச்சட்டம் இலங்கையில் முழுமையாக அமுல்படுத்தப்படுவதுடன் அதிகாரப்பகிர்வின் நிமிர்த்தம் 13ம் திருத்தச்சட்டத்திற்கு மேலதிகமான சில விடயங்களும் உள்ளடக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உலகநாடுகள் வழங்கிய உதவிக்காக அவர் அங்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் தற்போது என்றும் அனுபவித்திராத சுதந்திரத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு கருத்து பரிமாறிய அமெரிக்க பிரசி செயலர், பயங்கரவாதத்தை ஒழித்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசிற்கு உள்ள சவாலை அமெரிக்கா உணர்ந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment