ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள 12 இலங்கையர்களையும் மீட்பதற்கு முயற்சி.
ஐக்கிய அரபு எமிறேட்ஸில் இருந்து ஈரானுக்கு பயணித்துக்கொண்டிருந்த டுபாய் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான சஹாறா எனும் கப்பல் ஈரான் நாட்டு கடல் எல்லை விதிகளை மீறிய குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் இருந்தவர்களில் 12 பேர் இலங்கையர்களாகும். இவர்கள் இரானுக்கு சொந்தமான தீவொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களை மீட்கும் பொருட்டு ஈரான், தெரானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நாடாத்தியுள்ளதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஆவன செய்துள்ளதாகவும், அத்துடன் அவர்களை நேரில் சென்று பார்ப்பதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொண்டள்ளதாகவும் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment