முதல்- அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது, அந்த நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும், எல்லை ஒற்றுமையையும் பாதிக்கும் என்ற கேள்வி எழுந்தாலும் கூட, தற்போது இலங்கை விவகாரத்தை ஒரு சிறப்பு அம்சமாக கருத வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள தீர்மானம் இலங்கை தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணம் உலகம் முழுக்க வாழும் லட்சக்கணக்கான மக்களிடம் எழுந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
No comments:
Post a Comment