Tuesday, May 19, 2009

ஜேர்மன் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு அபராதம்.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்திற்கு எதிராக ஜேர்மன் நாட்டில் புலம்பெயர் தமிழர்களால் பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போராட்ங்களின்போது அந்நாட்டின் இயல்பு நிலைக்கு போராட்ட காரர்களால் குந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ரயில், பஸ் சேசைகள் இடைமறிக்கப்பட்டது. பெருந்தெருக்கள் வழிமறிக்கப்பட்டது.

இந்நிலைமைகளை கட்டுப்படுத்த போராட்ட ஏற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் மேற்கொண்ட வழிமறிப்பு போராட்டங்களால் றயில் மற்றம் பஸ் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஸ்டத்தை மேற்படி ஏற்பாட்டாளர்கள் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் பொலிஸார் அவர்களை விடுதலை செய்துள்ளனர்.

இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை சரியாக சரியாக தெரிவிக்காத புலிகள் தமக்கு 4.5 கோடி யுரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும். வன்னி மக்களின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் நிமிர்த்தமே இவ் அபராதத்தை சந்திக்க நேரிட்டதாகவும் கூறி மக்களிடம் பணம் பறிக்க புதிய யுத்தியொன்றை கையாண்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment