Friday, May 8, 2009

கல்முனையில் வெள்ளைவேன் கடத்தல் : மக்கள் ஆர்ப்பாட்டம்

இன்று கலை 11 மணியளவில் வெள்ளைவானின் வந்த குழுவொன்று அப்பிரதேசத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களை கடத்திச் சென்றுள்ளது. அக்கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக வீதியில் இறங்கிய பொதுமக்கள் கடத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விதிகளை கட்டைகள் போட்டு மறித்து உடனடிக் ஹர்த்தால் ஒன்றை அமுல்படுத்தினர்.

மக்கள் ஹர்த்தாலில் குதித்தமையால் அங்கு நிலைமைகள் மோசமடைவதை அறிந்த அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் திரு. இனியபாரதி: பிரதேச பிரதி பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு இடம்பெற்ற சம்பவத்தையும் அதன் எதிரொலியாக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளதையும் தெரியப்படுத்தினார். விடயங்களைக் கேட்டறிந்து கொண்ட பிரதி பொலிஸ்மா அதிபர்: விசாரணைகளை மேற்கொண்டு கடத்தல் காரர்களை உடனடியாக கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஆர்பாட்டத்தில் இறங்கியிருந்த மக்களை அவற்றைக் கைவிடுமாறும் கோரியிருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருந்த மக்களை நேரடியாகச் சென்று சந்தித்த திரு. இனியபாரதி அவர்கள் கடத்தல் காரர்களை கண்டு பிடிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் உறுதியளித்த விடயத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து மக்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடச் சம்மதித்தனர்.

மேற்படி விடயங்களை அறிந்து கொண்ட கடத்தல் காரர்கள் நிலைமைகள் மோசமடைவதை உணர்ந்தவர்களாக உடனடியாகவே தாம் கடத்திச் சென்றிருந்த நால்வரையும் வாகனமொன்றில் கொண்டுவந்து ஒதுக்குப்புறமான இடமொன்றில் இறக்கிச் சென்றுள்ளனர். நிலைமைகள் அங்கு வழமைக்குத் திருப்பியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com