கடந்த மாதம் மக்களோடு மக்களாக வந்த புலிகளின் மாஸ்ரர்களான ஜோர்ஜ் , தயா ஆகியோர் சிஐடி பொலிஸாரினால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீதான விசாரணை முடிவுறவில்லை எனவும் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைசெய்ய அனுமதி வேண்டும் எனவும் சிஐடியினரால் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த பிரதான மஜிஸ்திரேட் நிசாந்த கப்புஆராச்சி, அவ்விருவரையும் தொடர்ந்தும் விசாரணை செய்ய அனுமதி வழங்கினார்.
சுpஐடியினர் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவில், ஜோர்ஜ் மாஸ்ரர் , தயாமாஸ்ரர் ஆகியோர் புலிகளின் தலைமையினால் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அறிக்கைகளுக்கு பொறுப்பானவர்கள் எனவும் அவ் அறிக்கைகள் நாட்டின் பாதுகாப்பிற்கும் மக்களின் அமைதியான வாழ்விற்கும் குந்தகம் விளைவித்தவவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களை எதிர்வரும் யூன் மாதம் 26ம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment